குண்டும், குழியுமான சாலையில் ஒன்றரை வயது பிஞ்சு குழந்தை தலை நசுங்கி பலி!
திருநெல்வேலியில் பைக்கின் பின்னால் தாயின் மடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயது குழந்தை கார் ஏறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சேக் ,தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மேலப்பாளையம் BSNL அலுவலகம் வந்தபோது பின்னால் வந்த கார் ஒன்று இவர்களின் பைக்கின் மேல் மோதியது. இதில் பைக்கின் பின்னால் தாயின் மடியில் இருந்து கீழே விழுந்த ஒன்றரை வயது குழந்தையின் தலையில் கார் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை ரஹீமா ஒன்றரை வயது உயிரிழந்தது.
விபத்து ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இறந்த குழந்தையை மீட்டு மருத்துவ பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்தனர். குண்டும் குழியுமான நெடுஞ்சாலைத் துறையால் பராமரிக்கப்படாத இந்த ரோட்டினால் விபத்து நடந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

