இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: சட்டெனக் குறைந்த தங்கம்...
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும் எதிர்வரும் நாட்கள் பண்டிகை காலமாக இருப்பதால், தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களில் மட்டும் ரூ.4,600-க்கும் மேல் சரிந்தது. இதனால் மேலும் விலை சரியும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நேற்று (அக்டோபர் 5) தங்கம் மற்றும் வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் விற்பனையானது. இதன்படி தங்கத்தின் விலை 1 கிராம் ரூ.13,675-க்கும், ஒரு சவரன் ரூ.1,09,400-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் ரூ.245-க்கு விற்பனையானது.
இன்று (அக்டோபர் 6) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ.13,660-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.120 குறைந்து, ரூ.1,09,280-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

