இன்றைய தங்கம் விலை: ஒரு கிராம் ரூ.13,675! சவரன் எவ்வளவு தெரியுமா?
உலகளவில் போர் பதற்றம் மற்றும் பொருளாதார மாற்றங்களால் தங்கத்தின் விலையில் பெரும் தாக்கம் ஏற்படுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க டாலர் நிலையற்ற தன்மை உள்ளிட்ட பல காரணிகள் கூறப்படுகின்றன. அமெரிக்கா, ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
அதன்படி போர் முடிவுக்கு வரும் பட்சத்தில் தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருக்கும். ஆனால், தற்போதைய சூழ்நிலையில், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. மேலும் எதிர்வரும் நாட்கள் பண்டிகை காலமாக இருப்பதால், தங்கம் விலை ஏறுமுகத்தில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இருப்பினும் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலையில்லாமல் உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.5) எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,09,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் மாற்றமின்றி ரூ.13,675க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று நிலவிய அதே விலையே இன்றும் தொடர்வதால், தங்கம் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு விலையில் மாற்றமில்லாத நிலை காணப்படுகிறது

