தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

 
gold gold

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை  கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. ஒரு நாள் குறைந்தால் மறுநாள் அதிகரிக்கும் நிலையிலேயே நீட்டித்து வருகிறது. நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.4,469க்கும் ஒரு சவரன் ரூ.35,752க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,482க்கும் ஒரு சவரன் ரூ.35,856க்கும் விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது.

gold

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.2 அதிகரித்து ரூ.4,484க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.16 அதிகரித்து ரூ.35,872க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.50க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,500க்கும் விற்பனையாகிறது.