அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.240 குறைவு..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் மாலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.240 குறைந்து  36,000  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தங்கம் என்றுமே பெண்களுக்கு பிடித்தமான ஒன்றுதான்.. அதில் ஆபரணங்கள் அணிந்து பார்க்கும் ஆசை ஒருபுறம் இருந்தாலும்,   தங்கத்தை சிறந்த  சேமிப்பாக பெண்கள் கருதுகின்றனர்..  இந்த ஆண்டு (2022)  தொடங்கியதிலிருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. பொதுவாக தங்கம் விலையைக் கேட்டால்  தலை சுற்றும்.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

ஆனால் இன்றைய தினம்  இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக   தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.  நேற்று ஒரு கிராம்  தங்கம் ரூ.4,530 க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 36,240 ரூபாய்க்கும் விற்பனையானது.  இந்நிலையில் இன்று  கிராமுக்கு 20  ரூபாய் குறைந்து  4,500 ரூபாய்க்கும் , சரவனுக்கு ரூ.240 குறைந்து  36, 000  ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி

இதேபோல் வெள்ளி விலையும்  இன்று குறைந்துள்ளது. நேற்று  65.90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ. 65.40 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,400 க்கு விற்பனை செய்யப்படுகிறது.