இன்று +2 தேர்வு முடிவுகள் : எத்தனை மணிக்கு, எப்படி செக் செக் பண்ணலாம்?

 
1

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 7.8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். மொழிப்பாடம் மார்ச் ஒன்றாம் தேதி தொடங்கிய நிலையில், கடைசி பாடம் மார்ச் 22ஆம் தேதி நடைபெற்றது. பின்னர் தேர்தல் தொடர்பான வேலைகளில் ஆசிரியர்கள் பிஸியாக இருந்தனர். இதையடுத்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 

இந்நிலையில் இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளின் முடிவுகள் வெளியிடப்படுகின்றன. இதனை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடவுள்ளார்.

தேர்வு முடிவுகள் சம்பந்தப்பட்ட மாணவர்களின் தொலைபேசி எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும். இதுதவிர www.dge.tn.gov.in மற்றும் www.tnresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களுக்கு சென்று பார்க்கலாம். இதில் மாணவர்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் மதிப்பெண் பட்டியல் வெளியாகும்.