இன்று த.வெ.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Jan 29, 2025, 09:43 IST1738124003481

தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இவர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாபெரும் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அக்கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். இதனை தொடர்ந்து விஜய் கட்சி பணிகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை மும்முரமாக கவனித்து வருகிறார். இதனிடையே தமிழக வெற்றி கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு பூத் கமிட்டி நிர்வாகியை நியமிக்க அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. பனையூரில் நடக்கும் தமிழக வெற்றி கழக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.