இன்று தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் “இன்று தமிழ்நாட்டின் வீடுகளில், வீதிகளில், கடைகளில் கருப்புக் கொடி பறக்கட்டும்!. வாசல்களில் நம் எதிர்ப்புணர்வு கோலங்களாகப் பதியட்டும்!. இது தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல. தமிழ்நாட்டின் போராட்டம்!. தமிழர் உரிமைக்கான போராட்டம்!. எனவே கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் குரல் எழுப்புவோம்!. இன்று நாம் குரல் எழுப்ப மறுத்தால், நாடாளுமன்றத்தில் நமது குரல் மதிப்பற்றுப் போய்விடும்!. இந்தப் போராட்டத்துக்குத் தேவையான கருப்புக் கொடிகள் உங்கள் வீடுதேடி வர மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று அதில் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க திமுக எம்.பி.,க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், சதியை சட்டமாக்கினால் எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் வட மாநிலங்களுக்கு அரசியல் வலிமையை வாரி வழங்கினால், தமிழ்நாடு வேடிக்கை பார்க்காது என கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முழுவதும் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்க திமுக எம்.பி.,க்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், சதியை சட்டமாக்கினால் எப்படி ஏற்க முடியும் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.



