இன்று மதுரை காமராஜர் பல்கலை., பட்டமளிப்பு விழா - புறக்கணிக்கும் அமைச்சர் பொன்முடி

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பொன்முடி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய சுதந்திர போராட்ட வீரர் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ரவி புறக்கணித்தார்.
இதன் காரணமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் கலந்து கொள்ளும் நிலையில் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள் மீது அக்கறையாக உள்ளவர்கள் போல பேசும் ஆளுநர், ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஆளுநர் வரலாறு தெரியாமல் பேசியிருக்கிறார் என்றும் அமைச்சர் பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.