இன்று வைகாசி அமாவாசை: செய்யக்கூடியவையும் செய்ய கூடாதவையும்!

 
Q

அமாவாசை என்பதே முன்னோருக்கான நன்னாள்தான். இந்தநாளில், முன்னோரை நினைத்து அவர்களின் படங்களுக்கு பூக்களால் அலங்கரிப்பதும் தூபதீபங்கள் காட்டி ஆராதனை செய்வதும்... மிகவும் பலன் தரும் என்பது ஐதீகம்.

இந்தநாளில், மறக்காமல் முன்னோர் ஆராதனையைச் செய்யுங்கள். அவர்களின் படங்களுக்கு மாலை சார்த்துங்கள். அவர்களுக்குப் பிடித்த உணவை நைவேத்தியமாகப் படைத்து, காகத்துக்கு வழங்குங்கள்.

மேலும் முன்னோரை நினைத்து, உங்களால் முடிந்த அளவுக்கு, ஒரு நான்குபேருக்கேனும் தயிர்சாதம் அல்லது எலுமிச்சை சாதம் அல்லது சாம்பார் சாதம் என உணவுப் பொட்டலம் வழங்குங்கள். வீட்டில் இதுவரை இல்லாத நிம்மதியும் சந்தோஷமும் இனி குடியேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். தரித்திரம் விலகும். உங்கள் வாழ்க்கையையே வளமாக்கித் தருவார்கள் முன்னோர்கள் என்பது உறுதி!

வைகாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானது. வளங்களை அள்ளித் தரக்கூடியது. மாதவ மாதம் என்றும் வைகாசம் என்றும் இந்த மாதத்தை அழைப்பார்கள். வைகாசி மாதத்தில் புனித நதியில் நீராடிவிட்டு மகா விஷ்ணுவிற்கு துளசி இலைகளைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நற்பேறு கிடைக்கும் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

இன்றைய தினம் பசுவுக்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து தானமாக வழங்கினால் கோமாத அருள் நிறைவாகக் கிட்டும். மேலும் வைகாசி அமாவாசை வழிபாடு நீண்ட ஆயுள், செல்வ வளம், குழந்தை பாக்கியம் தரும்.

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதிமுறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது. அதேப்போன்று சில காய்கறிகளை சேர்த்து சமைத்தால் வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடியவை:

மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

அன்றைய தினம் ஒரு அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

காலையில் சீக்கிரம் எழுந்து சிவன், விஷ்ணுவை வணங்க வேண்டும்.

பூமியில் ஒரு ஸ்பூன் பால் ஊற்ற வேண்டும். அது உங்கள் வாழ்வில் இடையூறுகளை தாண்டிவர உதவும்சனி கோயிலில் கடுகு எண்ணெய், கருப்பு உளுந்து, இரும்புத் துண்டு, நீல மலர் தானமாகக் கொடுத்து வணங்கவும் சனி மந்திரத்தை 101 முறை ஜெபிக்கவும் 'Om Nilanjansamabhas Ravuputra Yamagrajam.

Chayamartandsambhut Namami Shanaishchara’ என்பது தான் அந்த மந்திரம். இது கோபம், கெட்ட பலன்கள் ஆகியனவற்றை நீக்கும்.

பசு மாட்டுக்கு பழங்கள் வழங்கலாம். இதனால் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஓங்கும். நீரில் எள்ளை கரைத்து வேண்டிக் கொள்ளலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை:இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது

துளசி இலையை பறிக்கக் கூடாது

இந்த நாளில் இறைச்சி, முட்டை, மீன், வெங்காயம், பூண்டு உண்ணக் கூடாது

நீண்ட தூரம் பயணம் கூடாது

வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது

வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாதுகடுமையான சொற்களை பயன்படுத்தக்கூடாது