வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இன்று முதல் தடை!!

 
temple

வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 983 பேர் பாதிக்கப்பட்டனர்.  இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 அதிகரித்துள்ளது. அத்துடன் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 825 ஆக உள்ளது.

temple

இந்த சூழலில் கொரோனாவை  கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.  வருகிற 31-ஆம் தேதி வரை தமிழகத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக, இரவு நேர ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. அதன்படி இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை முக்கிய சாலைகள், மேம்பாலங்கள் ஆகியவை தடுப்புகள் மூலம் மூடப்பட்டன. அதேபோல் பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது.  வாகனங்களில் அத்தியாவசிய பணியாளர்கள் தவிர மற்றவர்கள் வெளியில் செல்லக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது.

temple

இந்நிலையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.   பொதுவாக இந்த மூன்று நாட்கள் வழிபாட்டுத் தலங்களில் கூட்டமானது வழக்கத்தைவிட அதிகமாக காணப்படும். இதனால் தொற்று பரவல் அதிகரிக்கக்கூடும் என்பதால்  தமிழக அரசு வழிபாட்டு தலங்களுக்கு  தடை விதித்துள்ளது.