திராவிட மாடல் பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று! - முதல்வர் ஸ்டாலின்

 
stalin

திராவிட மாடல்  பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா பொறுப்பேற்ற தினத்தை ஒட்டி ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் முதலமைச்சராக பேரறிஞர் அண்ணா ,  1967ம் ஆண்டு  இதே நாளில் (மார்ச் 6ம் தேதி) பதவியேற்றார். மதராஸ் மாநிலத்தின் கடைசி முதலமைச்சரும்,  தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சரும் பேரறிஞர் அண்ணாதுரை தான். இன்று அண்ணா பொறுப்பேற்ற தினத்தை ஒட்டி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அத்துடன் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட புகைப்படத்தையும் அவர் பகிர்ந்திருக்கிறார்.  

அறிஞர் அண்ணா

அவர் தனது பதிவில்,  “நாம் செல்லுகின்ற திராவிட மாடல் ( #DravidianModel)பாதைக்குப் பேரறிஞர் அண்ணா அடித்தளமிட்ட நாள் இன்று!  "ஏ தாழ்ந்த தமிழகமே!" எனத் தட்டியெழுப்பி, தமிழ்நாட்டைத் தலைநிமிர வைத்த பேரறிஞர் அண்ணா, வெறும் பெயரல்ல; தமிழர் பெற்ற உணர்வு! பேரறிஞர் பெருந்தகையின் இலட்சியங்களை நிறைவேற்றப் பாடுபடுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.