இன்று திருவண்ணாமலை கிரிவலம் வர உகந்த நேரம் இது தான்..!

 
thiruvannamalai girivalam

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை மாதம் தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல லட்சம் பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.

மாசி மாதத்திற்கான பவுர்ணமி இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5.52 மணிக்கு நிறைவு பெறுகிறது.

இந்நிலையில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் நிர்வாகம், மார்ச் 2 ஆம் தேதி திங்கட்கிழமை மாலை 06.29 மணி முதல் மார்ச் 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 05.52 மணி வரை மாசி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கு உகந்த நேரத்தை அறிவித்துள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம். மேலும், கோவில் நிர்வாகம் வெளியிடும் அறிவிப்புகளைப் பின்பற்றி, ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.