கொரோனா வைரஸ்க்கு இன்று 2வது பிறந்தநாள்!

 
corona virus

கொரோனா வைரஸ். உலகையே ஆட்டிப்படைத்த வார்த்தை. உலகம் முழுக்க 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி, முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கட்டுக்கடங்காமல் பரவி வந்தது. குறிப்பாக சீனா, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்தியது. 

Weekly Update: Global Coronavirus Impact and Implications

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 51.29 லட்சத்தை தாண்டி உள்ளது. அதேபோல் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25.50 கோடியை தாண்டியுள்ளது. 2 ஆண்டுகள் ஆகியும் கூட, தொற்றின் வீரியம் குறைந்தபாடில்லை. இருப்பினும் தடுப்பூசியால் தொற்று பரவல் கொஞ்சம் கட்டுக்குள் வந்துள்ளது. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளன. முதன்முதலாக சீனாவின், ஹூபே நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு இதே ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.  55 வயதான நபருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால்  2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.