விவசாயிகளே மறந்துவிடாதீர்கள்... காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்!

 
பயிர் காப்பீடு

திருவாரூர், நாகை போன்ற டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் தொடர் மழையால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன. அதேபோல தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே விவசாயிகள் இயற்கை பேரழிவுகளிலிருந்து தங்களின் பயிர்களை பாதுகாக்க பயிர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்று மத்திய விவசாயத் துறை அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளுக்கும் இதுதொடர்பாக வலியுறுத்தியுள்ளது.

வரும் 7 ஆம் தேதி முதல் பயிர் நிவாரணம்! பயிர் சேத பட்டியல் சரிபார்ப்பு!

அதன்படி தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சேலம், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தேனி, இராமநாதபுரம், திருச்சிராப்பள்ளி, வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை, கடலூ, திருவள்ளூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பயிரை காப்பீடு செய்வதற்கு நவம்பர் 15 தான் கடைசி நாள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பயிர்கள் சேதம்

இதற்கு கால அவகாசம் தரக் கோரி விவசாய அமைப்புகள் தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்தின. ஆனால் அது மத்திய அரசு கையில் தான் இருப்பதாக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கைவிரித்தார். இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கூறியதாக தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு கால அவகாசம் கொடுக்கவில்லை. எனவே இன்றைக்குள் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வது சாலச்சிறந்தது. கன்னியாகுமரி, அரியலூர், திண்டுக்கல், விருதுநகர், நாமக்கல், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் சம்பா பருவத்தில் நெற்பியிரை காப்பீடு செய்வதற்கு டிசம்பர் 15 கடைசிநாளாகும். 

tamilnadu crop insurance: பயிர் காப்பீடு.. நாளை கடைசி நாள்.. விவசாயிகளுக்கு  தமிழக அரசு அலர்ட்! - tamilnadu government advises farmers to file for crop  insurance by tomorrow | Samayam Tamil

இதுவரை இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் பொது சேவை மையங்கள் மூலமாக பதிவு செய்துகொள்ளலாம். விவசாயிகள் காப்பீடு பதிவு செய்யும் போது, முன்மொழிவு விண்ணப்பத்துடன் பதிவு விண்ணப்பம், விஏஓ வழங்கும் அடங்கல்/ விதைப்பு அறிக்கை, வங்கி பாஸ்புக்கின் முதல் பக்க ஜெராக்ஸ் ஆதார் அட்டை ஜெராக்ஸ், பயிர் காப்பீட்டுத் தொகையில் 1.5% தொகையினை விவசாயிகளின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். இதற்கான ரசீதையும் பொதுச் சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.