தீபாவளியையொட்டி இன்று பொது விடுமுறை!!

 
govt

தீபாவளி திருநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். தீபாவளி நோன்பு  இன்று  கொண்டாடப்படுகிறது.

diwali

ஆசிரியர்கள் அரசு அலுவலர்கள், மாணவர்கள் சொந்த ஊரிலிருந்து ஞாயிற்றுக் கிழமை இரவே புறப்பட வேண்டி இருக்கும் என்பதால்,  அனைவரும் குடும்பத்துடன் ஒரு நாள் கூடுதலாக செலவிடும் வகையில் (13.11.2023  )இன்று தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை

இந்நிலையில் தீபாவளியையொட்டி தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பர் 18ஆம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்று ஆந்திராவிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.