தஞ்சையில் இன்று உள்ளூர் விடுமுறை

 
tn

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ஆராதனை திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் 177-வது ஆராதனை திருவிழா 26 ஆம் தேதி நடைபெற்றது.

tn

விழாவின் முக்கிய நிகழ்வான மங்கல இசை இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.  இதைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான கர்நாடக இசைக் கலைஞர்கள்  பாடல்கள் பாடி தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.

tn

இந்நிலையில் 177வது தியாகராஜர் ஆராதனை திருவிழாவை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்ரவரி 10ஆம் தேதி பணிநாளாக செயல்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் அறிவித்துள்ளார்.