நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

 
tn

நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

tnநாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் ஆரோக்கிய அன்னையின் ஆலயம் அமைந்துள்ளது.  இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ஆம் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும். அதன்படி ஆகஸ்ட் 29ம் தேதி ஆரோக்கிய அன்னையின் புனித கொடி ஏற்றப்பட்டது. இதன் காரணமாக லட்சக்கணக்கான பக்தர்கள் வெளி மாநிலங்களில் இருந்தும், நாடுகளில் இருந்தும் வேளாங்கண்ணிக்கு படையெடுத்தனர். அத்துடன் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.

Image

இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா திருவிழாவையொட்டி இன்று  நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நேற்றிரவு அன்னையின் தேர்பவனி, 8ம் தேதியான இன்று மாதா பிறந்தநாள் விழா நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஈடுசெய்ய வரும் 23ம் தேதி பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.