டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..

 
டிஎன்பிஎஸ்சி அலுவலகம்

7,382 காலிப்பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதுவரை 17 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.  

அரசு காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி அதன் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர் அந்தவகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான வருடாந்திர திட்டம் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டது.   அதன்படி குரூப்-4 தேர்வானது வருகிற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. மொத்தம்  7, 383 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  இதில் 81 இடங்கள் விளையாட்டு கோட்டா மூலம் நிரப்பப்படும்.  274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களும்,  முதல்முறையாக நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் வீட்டு வசதி வாரியங்கள் உள்ள 163 பணியிடங்களும் இதில் அடங்கும்.  

டிஎன்பிஎஸ்சி
ஜூலை 24-ம் தேதி  காலை 9.30 மணி முதல் 12 மணி வரை, மூன்று மணி நேரம் நடைபெறும்.    குரூப் 4 தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது என்றும்,  நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு  https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.   இந்நிலையில் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.  

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்..
 இந்நிலையில் குரூப்-4 தேர்வுக்கு கடந்த 24 ஆம் தேது  மாலை வரை 13 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருந்தார். ஆனால் நேற்று மாலை வரை  17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி  நாளாக உள்ள நிலையில் இன்னும்  அதிகமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் கடைசி நாளான இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.