காஞ்சிபுரத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை..

 
Tomorrow school  Leave


 காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

முன்னதாக நேற்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில்,  சென்னை, காஞ்சிபுரத்தில் இன்று( மார்ச் 11)   அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளிலும் 6 முதல் 10ம் வகுப்பு வரை திங்கள்கிழமை பாடவேளையை பின்பற்றி முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதே போல, 13ம் தேதி  தொடங்கப்பட உள்ள மேல்நிலை பொதுத் தேர்வுக்கான அனைத்து தேர்வு மைய தயாரிப்பு பணிகளும் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.  

schools leave

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்து மீண்டும் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.  முன்னதாக பிறப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை  ரத்து செய்து மீண்டும் புதிய உத்தரவை பிறப்பித்திருக்கிறார்.