சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை
Nov 15, 2023, 07:48 IST1700014723839

சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என தகவல் தெரிவித்த நிலையில் சென்னையில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக சென்னையில் உள்ள அரசு- தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை அளவு குறைவாக உள்ளதால் வழக்கம் போல் பள்ளி கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டத்திலும் நேற்று இரவு முதல் மழை இல்லாததால், இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.