இன்றைய லீக் போட்டியில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் மோதல்

 
Ipl

இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் அக்‌ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 31 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 112 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 95 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் பஞ்சாப் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்த நிலையில், இன்றைய ஐபிஎல் லீக் போட்டியில் அக்‌ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு
 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.