தொடர் தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது!

 
Csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 29 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 205 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. 
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ்ட் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 
லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் சென்னை அணி வெற்றியை தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.