ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரிப்பு!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.  நேற்று முன்தினம்   தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது.  

gold

நேற்று  சென்னையில் ஆபரண  தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதன் மூலம்  ஒரு கிராம் ரூ.6,090க்கு விற்பனையானது.   சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,720க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 உயர்ந்து, ரூ. 6,105 க்கு விற்பனையாகிறது.  இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 48,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை 49 ஆயிரம் ரூபாயை நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.