ரூ.45,000-க்கு கீழ் சென்ற தங்கம் விலை - மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.45,000-க்கு கீழ் சென்றுள்ளது நகைப்பிரியர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

gold

மே மாத தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தங்கத்தின் விலை ஏற்றத்தை சந்தித்து வந்ததால் சாமானியர்கள் பெரிதும் கலக்கமடைந்திருந்தனர். நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 160 உயர்ந்தது.  அதேசமயம் நேற்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 குறைந்து ஒரு கிராம் 5,625 ரூபாயாக விற்பனையானது.

gold

 இதன் மூலம் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 45 ஆயிரம் ஆக விற்பனையானது. அதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 76.50 காசுகளாகவும் , ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76 ஆயிரத்து 500 ரூபாயாகவும் விற்பனையானது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 160 குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 44 ஆயிரத்து 840 ஆக விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605 ஆக உள்ளது.