மீண்டும் ரூ.39,000 ஐ தாண்டிய தங்கம் விலை... சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு

 
gold

கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் இன்று,  சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை  சவரனுக்கு ரூ 272 அதிகரித்து  ஒரு சவரன்  39,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  
 gold
சென்னையில்  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலையானது  வாரத்தின் முதல் நாளான கடந்த திங்கள் கிழமை முதலே  தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது.  அன்றைய தினம் சவரனுக்கு  264  ரூபாய் குறைந்து,  ஒரு சவரன்  39,296  ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.  தொடந்து செவ்வாய் கிழமையன்று  சவரனுக்கு 248 ரூபாயும், நேற்று முன்தினம்  சவரனுக்கு  ரூ.200 ரூபாயும் குறைந்தது.  தொடர்ந்து நான்கவது நாளாக நேற்று  தங்கம் விலை சவரனுக்கு   200 ரூபாய்க்கும் மேல் குறைந்தது.   மாலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 38,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!  

இந்நிலையில் இன்று  சென்னையில்  தங்கம் விலை அதிரடியாக உயர்ந்திருக்கிறது.  22 ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு  272 ரூபாய் அதிகரித்திருக்கிறது.  ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ₹4,884 க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ₹39,072 க்கும்  விற்கப்படுகிறது.   அதேநேரம்  சென்னையில் வெள்ளி விலையில் மாற்றமின்றி  ஒரு கிராம் வெள்ளி ரூ. 68.80  விற்கப்படுகிறது.   ஒரு கிலோ வெள்ளி 68,800  ரூபாய்க்கு  விற்பனை செய்யப்படுகிறது.  தங்கத்தின்  விலையேற்றம் இல்லத்தரசிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.