தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு!
May 15, 2024, 10:16 IST1715748412670

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.
மே மாத தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது. நேற்றும் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்தது. நேற்றைய ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து ஒரு கிராம் ரூ.6,690க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ஒரு சவரன் ரூ.53,520க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,725க்கு விற்பனையாகிறது ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.53,800க்கு விற்பனையாகிறது.