அதிரடியாக குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.224 குறைந்து  36, 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

தங்கத்தின் மீதான ஆசை  என்பது என்றுமே தீராத ஒன்றுதான்.  அதில் ஆபரணங்கள் அணிந்து பார்க்கும் ஆசை ஒருபுறம் இருந்தாலும்,  மறுபுறம் சிறந்த மூதலீட்டுக்கான திட்டமாக பார்க்கப்படுகிறது.  ஆனால் தங்கம் விலையைக் கேட்டால் அப்படி ஆபரணங்கள் அணிந்து பார்க்கும் ஆசையோ,  முதலீடு செய்யும் ஆசையோ வராவே வராது.  அந்த அளவிற்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

ஆனால் இன்றைய தினம் தங்கம்   வாங்க விரும்பும் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக இன்று தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது.  நேற்று ஒரு கிராம்  தங்கம் ரூ.4,545 க்கும், ஒரு சவரன் ஆபரணத்தங்கம் 36 , 360 ரூபாய்க்கும் விற்பனையானது.  இந்நிலையில் இன்று  கிராமுக்கு 28 ரூபாய் குறைந்து  4,517 ரூபாய்க்கும் , சரவனுக்கு ரூ.224 குறைந்து  36, 136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி

இதேபோல் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. நேற்று  66.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் குறைந்து ரூ. 65.70 க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.65,700 க்கு விற்பனை செய்யப்படுகிறது.