ஒரே நாளில் அதிரடியாக குறைந்தது தங்கம் விலை : இன்றைய விலை நிலவரம் இதோ!!

 
gold

கொரோனா தொற்று மற்றும் தொழில்துறை தேக்கம் காரணமாக பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் ஆகியவற்றில் செய்து வந்த  முதலீடு  சரிவை சந்தித்து, தங்கத்தில்  முதலீடு செய்யும் நடைமுறை அதிகரிக்க தொடங்கியுள்ளது.   இதன் மூலம் கடந்த சில வாரங்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை என்பது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. 

gold

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ரூ. 4605- க்கு விற்பனையான நிலையில் சவரன்  ரூ.36840-க்கு விற்பனையாகியது. நேற்று ஒரேநாளில் சவரனுக்கு  ரூ.136 குறைந்தது சாமானியர்களுக்கு ஆறுதல் அளிக்க கூடிய செய்தியாக இருந்தது. 

gold

இந்நிலையில் சென்னையில் . தங்கம் விலை கிராமுக்கு ரூ.79 குறைந்து ரூ.4,534 க்கு விற்பனையாகிறது.இதன் மூலம் தங்கம்விலை சவரனுக்கு ரூ.632 குறைந்து ரூ.36,272க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ. 1.40 குறைந்து ரூ. 69.50 ஆகவும், வெள்ளி கிலோ ரூ.69,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.  ஒரேநாளில் ரூ.600க்கும் மேல் தங்கம் விலை குறைந்துள்ளது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.