ரூ.52,000 எட்டியது தங்கம் விலை - சாமானியர்கள் அதிர்ச்சி!!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.52 ஆயிரத்தை எட்டியுள்ளது.

gold

வரலாறு காணாத வகையில் தங்கம் விலை ஆனது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை சுமார் 50 ஆயிரத்தை எட்டியது.  இது சாமானியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தற்போது தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

gold

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,500-க்கு விற்பனையாகிறது. அத்துடன் சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.52,000-க்கும் விற்பனையாகிறது.