மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை - இன்றைய விலை நிலவரம் இதோ!!
Sep 12, 2023, 10:10 IST1694493611757

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹40 உயர்ந்துள்ளது.
செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று தங்கத்தின் விலை ஆனது சவரனுக்கு ரூ.40 உயர்ந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 40 உயர்ந்தது. ஒரு கிராம் ரூ. 5,515க்கும், சவரன் ரூ.44,120க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ₹40 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ₹5 உயர்ந்து ஒரு கிராம் ₹5,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன் மூலம் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ₹44,160க்கு விற்பனையாகி வருகிறது.