சுபமுகூர்த்த தினம் - சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாசி மாதத்தின் மங்களகரமான தினமான இன்று(மார்ச் 12) ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும். ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்படும்.
அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.