குறுவை விவசாயிகளுக்கு நிவாரணம் - முதலமைச்சர் இன்று ஆலோசனை!!

 
stalin stalin

குறுவை சாகுபடி விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது தொடர்பாக இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.

stalin

கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.  வழக்கமாக ஜூலை மாதத்தில் படிப்படியாகத் திறந்து விடப்படும்.  நீரின் அளவு 16,000 கனஅடியாக உயர்த்தி,  ஆகஸ்ட் மாதத்தில் 18,000  கனஅடியாக தேவைக்கேற்ப மற்றும் மழையின் அளவுக்கேற்ப வழங்கப்படும்.  ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு வெறும் பத்தாயிரம் கன அடி தான்.  இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் ஆற்றங்கரை ஓரமுள்ள பாசன பரப்புகள் மற்றும் தண்ணீர் திறந்து விடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசன பரப்புகள் தவிர மற்ற இடங்களில் உள்ள குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி கருகினர். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

cm stalin

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வேளாண் அதிகாரிகள் தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை மேற்கொள்கின்றனர்.  இந்த கூட்டத்தில் வேளாண் அமைச்சர்,  துறை சார்ந்த செயலாளர், ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்கின்றனர். குறுவை சாகுபடி தண்ணீர் இன்றி கருகியதால் குறுவைப் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்தும் , விவசாயிகளுக்கு நிவாரணம் அளிப்பது குறித்தும் , இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.  டெல்டா மாவட்டத்தில்  குருவை சாகுபடி பாதிப்புக்காக வழங்க வேண்டிய நிவாரண தொகை குறித்தும் குழு ஆய்வு மேற்கொண்டுள்ள நிலையில் அதன் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.