முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

 
cabinet meeting

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.  

சென்னை தலைமைச் செயலகத்தில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (05.02.2025) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க வருமாறு 45 அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், விசிக, தமிழக வெற்றி கழகம், மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளன. 

அதிமுக, தேமுதிக, மற்ற கட்சிகள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளன. இதேபோல் இன்று நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழக வெற்றி கழகம் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு பதில் இரண்டாவது கட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.