நீட் தேர்வு விலக்கு தொடர்பாக இன்று அனைத்துக்கட்சி கூட்டம்!

நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.
நீட் தேர்வால் தமிழகத்தில் மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவது மிகவும் கடினமாக உள்ளது. நீட் தேர்வுக்கு அஞ்சி சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதன் காரணமாக நீட் தேர்வுக்கு தமிழத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கடுமையாக நீட் தேர்வை எதிர்த்து வருகின்றன. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையி, அந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் நீட் விலக்கு தொடர்பாக ஏப்ரல் 09ம் தேதி அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.
இந்த நிலையில், நீட் விலக்கு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.நீட் தேர்வு விலக்கு தொடர்பாக அடுத்தகட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நீட் விலக்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது குறிப்பிடதக்கது.