தங்கம் விலை அதிரடி உயர்வு.. சவரனுக்கு ரூ.448 அதிகரிப்பு..

 
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.448  அதிகரித்து, ஒரு சவரன் ரூ.38,912க்கு விற்பனை செய்யப்படுகிறது.  

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் காலை நேர விலை நிலவரம்

உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்னர் தங்கம் விலை அதிரடியான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அட்சயதிருதியை ஒட்டி  நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் கடந்த திங்கள்,செவ்வாய் ஆகிய 2 நாட்களாக  தங்கம் விலை  வெகுவாக குறைந்தது.  அட்சயதிருதியை நாளில் மட்டும் 18 டன் தங்கம் விற்பனையானது.  அந்தவகையில் கடந்த  2 நாட்களில் மட்டும்  சவரனுக்கு ரூ.856 குறைந்தது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் அட்சய திருதியை  நிறைவடைந்ததும் அடுத்த நாளே, அதாவது நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்து,  நகை பிரியர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.  

வெள்ளி

அதனைத்தொடர்ந்து  இன்றும் சென்னையில்  தங்கம் விலை சவரனுக்கு ரூ.448  அதிகரித்துள்ளது.  அதன்படி  சென்னையில் இன்று ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கம்  4,864 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல்   ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ. 38,912  விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில்  வெள்ளி விலையும் அதிகரித்திருக்கிறது.  ஒரு கிராம் வெள்ளி ரூ.1 உயர்ந்து ரூ. 68.30  விற்கப்படுகிறது.  ஒரு கிலோ வெள்ளி 68,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.