வடலூர் வள்ளலார் பெருவெளியைக் காக்க நடக்கும் அறப்போராட்டத்தை அடக்குமுறைகள் மூலம் முடக்க நினைப்பதா?

 
seeman

 நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

seeman

இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது சமூகவலைதள பக்கத்தில், வடலூர் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்து ஆய்வு மையம் என்ற பெயரில் வலுக்கட்டாயமாகத் தொடங்கப்பட்டுள்ள கட்டுமானப்பணிகளை நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி மற்றும் தெய்வத்தமிழ்ப்பேரவை இணைந்து இன்று (04-05-2024) வடலூரில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முழுமையாக அனுமதி மறுத்திருப்பதோடு, தமிழ்நாடு முழுமைக்கும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களையும் கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்திருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. கோரிக்கை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து, அடக்குமுறையை ஏவும் இத்தகைய நிர்வாகச்செயல்பாடு மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான மாபெரும் கொடுமையாகும்.

seeman

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தவிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளையும், தெய்வத்தமிழ்ப் பேரவையினரையும் கைதுசெய்திருப்பதால்,  நீதிமன்றத்தை நாடி உரிய அனுமதியைப் பெற்று, ஆர்ப்பாட்டம் மாநிலம் தழுவிய அளவில் பேரேழுச்சியாக மீண்டும் நடத்தப்படுமெனவும், வடலூரில் வள்ளலார் பெருவெளியை ஆக்கிரமித்துக் கட்டப்படும் கட்டுமானம் அறப்போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்படுமெனவும் பேரறிவிப்பு செய்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.