பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களுக்கு நேர்ந்த துயரம்! துடிதுடித்து பறிபோன 4 உயிர்
Jun 11, 2026, 20:00 IST1781188253212
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சாலை விபத்தில் 4 பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பள்ளி மாணவர்கள் மீது கார் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரகோட்டையில் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்கள் மீது கார் அதிவேகமாக மோதியுள்ளது. இதில் லோகேஷ் (12), ரஷீத் (13) உட்பட 4 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார், மாணவர்கள் மீது மோதியது.

