குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

 
tnpsc

வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட 6,244 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது TNPSC. ஜூன் 9ம் தேதி காலை 9.30 முதல், பகல் 12.30 வரை தேர்வு நடைபெறுகிறது. குரூப்-4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் பிப். 28ம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .

TNPSC

குரூப்-4 தேர்வுக்கு www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். கிராம நிர்வாக அலுவலர் 108, இளநிலை உதவியாளர் 2,604, தட்டச்சர் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, பில் கலெக்டர் 66 உட்பட 6,244 இடங்களுக்கு  தேர்வு நடைபெறவுள்ளது.

tnpsc3

வருகிற மார்ச் 4 முதல் மார்ச் 6 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களில் திருத்தம் செய்துகொள்ளலாம் இந்த தேர்வுக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வானது நடைபெற இருக்கிறது. தமிழில் 100 கேள்விகளுக்கு 150 மதிப்பெண்களும், பொதுவான கேள்விகளாக 75 கேள்விகளும் , ஆப்டிடியூட்   25 கேள்விகளும் இடம்பெறும் , மொத்தமாக 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும்.  3 மணி நேரம் நடைபெறும்  தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணாக 90 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும்.