டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியானது..!

 
1
இந்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல் குரூப் 4 தேர்வு உள்பட பல்வேறு தேர்வுக்கான காலஅட்டவணை வெளியிடப்பட்டது.

அதன்படி 6,244 பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான அறிவிப்பு என்பது கடந்த ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜுன் 9ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் 23ம் தேதி 29 பணியிடங்களுக்கான குரூப் 1பி, 1சி தேர்வுகள் (Preliminary) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வுகள் ஜுலை 12ம் தேதி நடைபெறுகிறது.

இதுதவிர கடந்த மார்ச் மாதம் 28 ம் தேதி 90 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு (Preliminary) தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த தேர்வு ஜுலை 13ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 2,030 பணியிடங்களுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வரும் ஜுன் மாதம் 28 ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு குரூப் 2, குரூப் 2 ஏ பதவிகளுக்கான தேர்வு (Preliminary) செப்டம்பர் 28 ல் நடைபெறுகிறது.

இதுதவிர 105 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவையில் (டிகிரி மற்றும் டிகிரி முடித்தவர்கள்) நேர்க்காணலுடன் கூடிய பதவிகளுக்கான அறிவிப்பு என்பது மே மாதம் 15ம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு தேர்வு என்பதுஆகஸ்ட் 8 ம் தேதி நடைபெறும்.

மேலும் 605 காலிப்பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவையில் (டிகிரி மற்றும் டிகிரி முடித்தவர்கள்) நேர்க்காணல் இல்லாத பதவிகளுக்கான அறிவிப்பு என்பது ஜுலை 26ம் தேதி வெளியாகும். இந்த தேர்வு என்பது அக்டோபர் 14ம் தேதி நடைபெற உள்ளது. இதுதவிர 730 காலியிடங்களுக்கான ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைக்கான (டிப்ளமோ/ஐடிஐ லெவல்) தேர்வு குறித்த அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு நவம்பர் 17 ம் தேதி நடைபெற உள்ளது.

இதுமட்டுமின்றி 50 பணியிடங்களுக்கான Assistant Public Prosecutor Grade II in Prosecution Department (Preliminary) தேர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் 13ம் தேதி வெளியிடப்படும். இதற்கான தேர்வு டிசம்பர் 12ம் தேதி நடைபெற உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.