ஞாயிறு அன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு - தேர்வாணையம் அறிவிப்பு..

 
டிஎன்பிஎஸ்சி

ஞாயிறு முழு ஊரடங்கு நாளன்று நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்தி வைக்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நாளை கட்டடக்கலை / திட்ட உதவியாளர் பணிகளுக்கும், நாளை மறுநாள் (09.01.22) என்று ஒருங்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற இருந்தது.  இந்நிலையில்  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக  இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு  அமல்படுத்தப்பட்டுள்ளது.

மன உளைச்சலில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள்… விரைந்து கலந்தாய்வு நடத்த ராமதாஸ் கோரிக்கை!

அதன்படி ஞாயிறு முழு ஊரடங்கு வருகிற 09.01.2022  முதல் அமலுக்கு வருகிறது.. இந்த அறிவிப்பு  அன்றைய தினம் தேர்வு எழுந்த இருந்த தேர்வர்களிடையே பெரும் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.  இதனையடுத்து திட்டமிட்டபடி தேர்வுகள் நடத்தப்படும் என நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்தது.

டிஎன்பிஎஸ்சி

இந்நிலையில் இன்று ஞாயிறு அன்று நடைபெற இருந்த தேர்வு  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய  அதிகாரி வெளியிட்டுள்ள செய்தியில்,  நாளை நடைபெற இருந்த கட்டக்கலை/ திட்ட உதவியாளர்  பணிக்கான  தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாளை மறுநாள்  ஞாயிறு முழு ஊரடங்கு அன்று  09.01.22)  நடைபெற இருந்த ஒருக்கிணைந்த புள்ளியல் சார்நிலை பணிக்கான தேர்வுகள் ஜன.11 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஹால் டிக்கெட்டை பயன்படுத்தி தேர்வர்கள் 11 ஆம் தேதி தேர்வு எழுதலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.