ஜன.22இல் டிஎன்பிஎஸ்சி தேர்வு... ஹால்டிக்கெட்டுகள் எப்போது கிடைக்கும்? - வெளியான புது அறிவிப்பு!

 
டிஎன்பிஎஸ்சி

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான எழுத்து தேர்வு ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ஆராய்ச்சி உதவியாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 22ஆம் நடைபெறும். தேர்வெழுதஅனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட்டுகள் www.tnpsc.gov.in , www.tnpscexams.in என்ற வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப எண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

TNPSC group 4 VAO exam syllabus details for Tamil & English papers,  வேலைவாய்ப்பு, தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு வேலை,  குரூப் 4 சிலபஸ், விஏஒ ...

தேர்வர்கள் விடைத்தாளில் விவரங்களைப் பூர்த்தி செய்யவும் விடைகளைக் குறிக்கவும் கறுப்பு நிற மை பால் பாய்ன்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்; தவறினால் விடைத்தாள்கள் செல்லாததாக கருதப்படும். 9.15 மணிக்கு பின்னர் தேர்வர்கள் தேர்வு அறைக்குள் நுழையவோ, 1.15 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாலை தேர்விற்கு 2.15 மணிக்கு பின்னர் தேர்வு அறைக்குள் நுழையவோ 5.15 மணிக்கு முன்னர் தேர்வு அறையிலிருந்து வெளியேறவோ அனுமதி இல்லை. விண்ணப்பதாரர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை எளிதில் தெரிந்துகொள்ளும் பொருட்டு ஹால் டிக்கெட்டில் QR CODE அச்சிடப்பட்டுள்ளது. 

மார்ச்சில் குரூப் 4 தேர்வு : 2022 டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான அட்டவணை  வெளியீடு...

இதனை QR CODE செயலி மூலம் ஸ்கேன் செய்து தேர்வுக்கூடம் அமைந்துள்ள இடத்தினை Google Maps மூலமாகத் தெரிந்து கொண்டு பயன் பெறலாம். தேர்வு அறைக்குள் அலைபேசி மற்றும் வேறு ஏதேனும் மின்னணு உபகரணங்கள் கொண்டுசெல்ல அனுமதியில்லை. எனவே, விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகளில் பத்தி எண் 17 ( A ) ( iv )-ல் உள்ள குறிப்பின்படி தங்களது அலைபேசி உட்பட பிற உடைமைகளை தேர்வு மையத்திலுள்ள பாதுகாப்பு அறையில் ஒப்படைக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.