“மின்சாரத்தை நிறுத்த சொன்னதே தவெகவினர் தான்”- TNEB

 
s

விஜய் பிரச்சார இடத்தில் மின்விநியோகத்தை நிறுத்த த.வெ.க.வினர் கோரிக்கை விடுத்தனர் என மின்சாரத்துறை ராஜலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜலட்சுமி, “விஜய் பரப்புரையின்போது தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டது. விஜய் பிரச்சார இடத்தில் மின் விநியோகத்தை நிறுத்த தவெகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மின் விநியோகத்தை நிறுத்தாமல் தடையில்லாமல் மின்சாரம் வழங்கினோம். இதை சம்பவ வீடியோக்களிலிருந்த தெரு விளக்குகள், கடைகளின் விளக்குகள் மூலம் அனைவரும் உறுதி செய்து கொள்ளலாம். கூட்டம் ஏற்பாட்டாளர்களால் பொறுத்தப்பட்ட ஜெனரேட்டர் மற்றும் Focus லைட் தான் கூட்ட நெரிசலில் ஆஃப் ஆகியுள்ளது. பிரச்சாரம் நடைபெற்ற இடத்தில் ஜெனரேட்டர்களால் இயக்கப்பட்ட மின் விளக்குகளே அணைந்தது” என்றார்.