வ.உ.சிதம்பரம் ஐயாவின் தன்னலமற்ற தியாக வரலாறை போற்றி வணங்குகிறோம் - அண்ணாமலை

 
Annamalai

கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நினைவு தினத்தையொட்டி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், சுதந்திரப் போராட்டத்தில், நாட்டுக்காக தனது உடமைகள் அனைத்தையும் தியாகம் செய்து, சுதேசி வேள்வி ஊட்டிய கப்பலோட்டிய தமிழர் ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் நினைவு தினம் இன்று. சிறந்த வழக்கறிஞராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தவர். எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தேச விடுதலைக்காக, கடுமையான சிறைத் தண்டனைகளை அனுபவித்தவர். மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக விளங்கியவர். 

Annamalai

சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும் என ஆங்கிலேய நீதிபதியே தீர்ப்பில் குறிப்பிடும் அளவுக்கு தேச விடுதலைக்காகப் போராடிய ஐயா வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் தன்னலமற்ற தியாக வரலாறை போற்றி வணங்குகிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.