தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் ரெய்டு!

 
tn

அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா என்கின்ற சத்யநாராயணன் சென்னை தி.நகர் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை எம்எல்ஏவாக இருந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டார்.  அப்போது அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில்  தனது சொத்து மதிப்பு 2 கோடியை 78 லட்சம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

 

tn

ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சத்யநாராயணன் சொத்து மதிப்பை வெளியிடுமாறு கேட்டபோது,  அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு 13 கோடியே இரண்டு லட்சம் என தகவல் வெளியிடப்பட்டது.  இதன் காரணமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யாவின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

tn

இந்நிலையில் ஆரம்பாக்கத்தில் தி.நகர் சத்யாவின் நண்பர் திலீப்குமார் அலுவலகத்தில் ரெய்டு நடைபெற்று வருகிறது. 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் காலை 7 மணி முதல் சோதனை   நடத்தப்பட்டு வருகிறது. திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான 8 பேர் கொண்ட குழு சோதனை செய்து வருகிறது.

tn

முக்கிய ஆவணங்கள் சிக்க வாய்ப்புள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா தொடர்புடைய 18 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.