37 மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடக்கம்!!

 
ttn

தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், ஏழை மாணவர்களின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்துக் குறைபாட்டினை போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ,  அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ /மாணவியருக்கு முதற்கட்டமாக அனைத்துப் பள்ளி வேலை நாட்களிலும் காலை வேளைகளில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று  அறிவித்தார்.  இத்திட்டமானது பேரறிஞர் அண்ணாவின் 114ஆவது பிறந்தநாளையொட்டி நேற்று மதுரையில் தொடங்கி வைக்கப்பட்டது.

tn

இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளது.மதுரையை தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் இன்று தொடங்கியுள்ளது.  மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

tn

மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.