இனிமேல் எம்.எல்.ஏக்களுக்கு 10 நிமிடங்கள் தான் பேச அனுமதி... திங்கட்கிழமை முதல் புது ரூல்ஸ்- சபாநாயகர் அதிரடி

 
JCD prabhakar

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு 10 நிமிடம் மட்டும் பேச அனுமதி ஆக. 17-லிருந்து சட்டப்பேரவையில் புதிய விதி அமல்படுத்தப்படவுள்ளது.

சட்டப்பேரவையில் வரும் திங்கட்கிழமை (ஆக.17) முதல் உறுப்பினர்களுக்கு 10 நிமிடங்கள் மட்டுமே பேச அனுமதி என சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் அறிவித்துள்ளார்.  இதுதொடர்பாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மாலை நேரத்தில் கூட சட்டப்பேரவையை நடத்தலாம் என்று முடிவுகள் எடுத்தோம். ஆனால் மாலை நேரத்தில் வைத்தால் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்பதால் ஒரே அமர்வாக கூட்டம் நடத்தப்படுகிறது. வரும் திங்கட்கிழமை முதல் உறுப்பினர்கள் 10 நிமிடம் மட்டுமே பேச அனுமதி. நேரம் கடந்தால் அடுத்தவர்களை பேச அழைத்துவிடுவேன். யாரும் கோபித்து கொள்ள வேண்டாம்” என்றார்.