#TN INTERIM BUDGET 2026-27 : எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு..!

 
1

2026-27 ஆம் ஆண்​டுக்கான இடைக்​கால பட்​ஜெட்டை நிதியமைச்​சர் தங்​கம் தென்​னரசு இன்று தாக்கல் செய்​தார். வரும் 20ஆம் தேதி 2026-27ஆம் நிதிஆண்​டுக்​கான முன்பண மானிய கோரிக்​கை​யும், 2025-26ம் ஆண்​டுக்​கான கூடு​தல் செல​வின மானிய கோரிக்​கை​யும் தாக்கல் செய்​யப்​படு​கின்​றன.

41 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள் அமைக்க ரூ. 291 கோடி ஒதுக்கீடு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ. 22,090 கோடி

சென்னை மாநகரின் சுற்றுக்குழாய் திட்டம் - ரூ. 3,000 கோடி

தொழிலாளர் நலத்துறை - ரூ. 1,996 கோடி

நதிக்கரை மேம்பாட்டு திட்டம் - ரூ. 374 கோடி

பள்ளிக் கல்வித் துறை - ரூ. 48,534 கோடி ஒதுக்கீடு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை - ரூ. 1,471 கோடி ஒதுக்கீடு

Advertisement

அயலகத் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி - ரூ.10 கோடி ஒதுக்கீடு

உயர் கல்வித்துறை - ரூ. 8,505 கோடி

சிறப்பு திட்ட செயலாக்கத் துறை - ரூ.17,088 கோடி

ஊரக வளர்ச்சி துறை - ரூ. 28,687 கோடி

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை - ரூ. 718 கோடி

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ. 28,827 கோடி

அனைத்து சமூக பாதுகாப்பு திட்டங்கள் - ரூ. 5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

தொழில் முதலீடு ஊக்குவிப்பு துறைக்கு 4882 கோடி நிதி உதவி ஒதுக்கீடு

தூத்துக்குடியில் ரூ. 5200 கோடி மதிப்பில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும்

எரிசக்தி துறை - ரூ. 18,091 கோடி

நீர்வளத் துறை - ரூ. 10,076 கோடி

குறு,சிறு,நடுத்தர தொழில் நிறுவன துறை - ரூ. 1,943 கோடி

தகவல் தொழில்நுட்பத் துறை - ரூ. 219 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 

தமிழ்நாடு போக்குவரத்து துறை - ரூ. 13,062 கோடி

மகளிர் விடியல் திட்டம் - ரூ. 4000 கோடி

மாணவர்களின் இலவச பஸ் பாஸ் திட்டம் - ரூ. 1782 கோடி

நெடுஞ்சாலைத் துறை - ரூ. 21,132 கோடி

மின்சாரம் மற்றும் எரிசக்தி துறை - ரூ. 18,091 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்