பெண்களை அநாகரீகமாக பேசிய சீமான் மீது தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்: பெ.சண்முகம்!
Mar 2, 2025, 06:45 IST1740878136000

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பாலியல் குற்றவாளி சீமான் தொடர்ந்து ஊடகத்தில் பெண்களை வாயில் சொல்ல முடியாத சொற்களால் அநாகரீகமாகவும் தரக்குறைவாகவும் பேசுவதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை என்ன செய்ய முடியும் என்று ஆணவத்துடன் சட்டத்திற்கு சவால் விட்டுக்கொண்டுள்ள அவர் மீது தமிழக அரசு உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருடைய கட்சியில் பெண்களை மதிப்பவர்கள் இருந்தால் உடனடியாக அக்கட்சியிலிருந்து வெளியேற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.