இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு "மாணவர் சிறப்புப் பேருந்தை" இயக்கவேண்டும்!

 
kamal

மாணவர் சிறப்புப் பேருந்து இயக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

tn

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சினிகிரிப்பள்ளியை  சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகள் நவ்யா ஸ்ரீ . இவர் கெலமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் கிராமங்களில் இருந்து தர்மபுரி செல்லக்கூடிய அரசு பேருந்தில் பயணித்துள்ளார். பேருந்து சினிகிரிப்பள்ளி நிறுத்தத்தில் நிற்காமல் பல மீட்டர்கள் தூரம் சென்றதாக தெரிகிறது பேருந்து நிற்காது கால் மாணவி ஓடும் பேருந்தில் இருந்து குதித்துள்ளார்.  இதில் பேருந்தின் பின்பக்க டயர் கை மற்றும் காலில் மீது ஏறி  விபத்துக்குள்ளான மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரசு பேருந்து ஓட்டுனர் வெங்கடேஷ் மற்றும் நடத்துநர் மீது உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

kamal

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்ற அரசுப் பேருந்துகளால், கடலூர் மற்றும் ஓசூரில் பள்ளி மாணவர்கள் இருவர் ஓடும்பேருந்திலிருந்து குதித்து உயிரிழந்துள்ளனர். இன்னுமோர் உயிர் பிரிவதற்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கடந்த (24/11/2021) அன்று முன்வைத்த "மாணவர் சிறப்புப்பேருந்து" கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். அரசுப்பேருந்துகளில் பயணம் செய்வோரின் கண்ணியமும், பாதுகாப்பும் பாதிக்கப்படும் நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் இவ்வகை அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.